தனது உரையை முடித்துக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அடுத்ததாக சபாநாயகர் தனபால் தமிழில் உரையாற்றுவார் என்று கூறினார்.
* அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புயர்வு உயர்கல்வி நிறுவனமாக மாறினாலும் இடஒதுக்கீட்டில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது
* சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது
* தமிழக உணவு தானிய உற்பத்தி 115 லட்சம் மெட்ரிக் டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
* ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை தமிழக அரசு எளிதாக நடைமுறைப்படுத்த முடிகிறது
* தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்ககத்தின் சிறப்பு முயற்சியாக ஒரு லட்சம் பேரை தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்படும்
* தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு கொள்கை முழுமையாக அமல்படுத்தப்பட்டு தொடர்ந்து கடைபிடிக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில் தகுந்த பணியிடங்கள் அடையாளம் காணப்படும்
ஆளுநர் உரையின் அம்சங்கள்: