ஆளுநர் உரையின் அம்சங்கள்:

சேலம் மாவட்டம் தலைவாசலில் ரூ.1,000 கோடியில் கால்நடை மேம்பாட்டு ஆராய்ச்சிக்கான மையத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும்

* கோதாவரி ஆற்றிலிருந்து குறைந்தபட்சம் 200 டி.எம்.சி தண்ணீரை பெற மத்திய அரசை வலியுறுத்துவோம்

* தமிழகத்தில் நீர் நிலைகளை தூர்வாரியதன் மூலமாக இந்தாண்டு போதிய மழை நீரை சேமிக்க முடிந்தது. காவிரி ஆற்றின் தூய்மையை மீட்டெடுக்க ”நடந்தாய் வாழி காவிரி” என்ற திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார்

* ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ஒன்றாம் தேதியை ”தமிழ்நாடு நாள்” என கொண்டாட அறிவிப்பு வெளியிட்டதற்கு தமிழக முதலமைச்சருக்கு பாராட்டுக்கள்

* 2018ஆம் ஆண்டை காட்டிலும் 2019ல் தமிழக மீனவர்கள் பிடிபடுவது குறைந்துள்ளது. தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்