வேலூரில் செயல்பட்டு வரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், உதவிப்பேராசிரியர் பணிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எந்தெந்த துறைகளில், எத்தனை காலியிடங்கள் உள்ளது என்பது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.
வேலூர் மாவட்டம் சேர்க்காட்டில், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் இருந்து டிசம்பர் 1 தேதியிட்ட, வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, வணிகவியல், உயிர்தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் சைன்ஸ், இயற்பியல் உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர், உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.