உன்னாவ் என்ற இடத்தில் கடந்த மார்ச் மாதம் இளம்பெண் ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த இரண்டு குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
அவர்கள் இருவரும் தங்களது நண்பர்களுடன் இணைந்து அந்தப் பெண்ணுக்கு நேற்று அதிகாலை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். இதில் 90% காயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் அபாயக் கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.