சீதா எரிக்கப்படுகிறார்; ராமர் கோயிலும் கட்டப்படுகிறது: காங்கிரஸ் எம்.பி.யால் சர்ச்சை

ஒரு பக்கம் சீதா எரிக்கப்படுகிறார். மறுபக்கம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு திட்டமிட்டு வருகிறார்கள்'' என்று காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியது இன்று மக்களவையில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்களவையில் இன்று காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி உன்னாவ் சம்பவம் குறித்துப் பேசினார். அப்போது, ''ஒரு பக்கம் சீதா எரிக்கப்படுகிறார். மறுபக்கம் ராமருக்கு கோயில் கட்டுவதற்கு திட்டமிடப்படுகிறது. சிறந்த மாநிலமாக இருக்கும் உத்தரப் பிரதேசத்தை சட்டம் இல்லாத மாநிலமாக மாற்ற முயற்சித்து வருகின்றனர் '' என்றார்.

இவருக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய ஸ்மிருதி, ''பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைகளை அரசியலாக்குவது, வகுப்பு வாதத்திற்கு இட்டுச் செல்வது துரதிருஷ்டவசமானது. இதேபோன்று மேற்குவங்கத்தில் நடந்த சம்பவத்துடன் எதிர்க்கட்சியினர் ஒப்பிட்டு பேசுவதில்லை ஏன்.