தக்காளி ரசம், அரைச்சிவிட்ட சாம்பார், கடலை குருமா!... இரவு விருந்தில் சீன அதிபருக்கு பரிமாற இருக்கும் தமிழக பாரம்பரிய உணவு வகைகள்.
சென்னை: சென்னை வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு இன்று இரவு விருந்தாக தமிழக பாரம்பரிய உணவுகள் பரிமாறப்படுகிறது. குறிப்பாக தக்காளி ரசம், அரச்சுவைத்த சம்பார் மற்றும் கவனரசி அல்வா உள்ளிட்டவை பரிமாறப்பட உள்ளது.
பிரதமர் மோடி - சீனா அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான முறைசாரா சந்திப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான இரண்டாவது முறைசாரா உச்சிமாநாடு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று நடக்கிறது..வழக்கமான இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பில் நடக்க இருக்கும் ஒப்பந்தம் கையெழுத்து, கூட்டறிக்கை ஆகியவை இந்த வகையான நட்புரீதியிலான சந்திப்பு இருக்காது.சில முக்கிய விவகாரங்கள் தொடர்பாக இரு தலைவர்களும் பேச உள்ளனர். மேலும், மாமல்லபுரத்தில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளை கண்டுகளிக்கின்றனர்.